
முதல்முறையாக யுஎஸ் ஓபன் இறுதிக்கு முன்னேறிய ஷெல்டன்..! அமெரிக்காவின் நீண்ட கால கனவு நிறைவேறுமா?
யுஎஸ் ஓபனில் முதல்முறையாக இறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் குறித்து...

இரண்டாவது செட்டை வென்றபோது ஷெல்டனின் கொண்டாட்டம். - படம்: ஏபி
யுஎஸ் ஓபன் ஆடவருக்கான அரையிறுதியில் அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் சக அமெரிக்க வீரரான பிரான்சிஸ் டியாஃபோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டி நாளை (செப்.13) நடைபெற இருக்கிறது.
முதல் அரையிறுதியில் அமெரிக்க வீரர்கள் பென் ஷெல்டன், பிரான்சிஸ் டியாஃபோ மோதினார்கள். இந்தப் போட்டியில் பென் ஷெல்டன் நான்கு செட்களில் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
முதல் செட்டை 4-6 என இழந்த ஷெல்டன், அடுத்தடுத்த செட்களில் 6-3, 6-3, 7-5 என வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 197 நிமிஷங்கள் (3 மணி நேரம் 17 நிமிஷங்கள்) நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் ஷெல்டன் வென்றால், யுஎஸ் ஓபனை அமெரிக்காவின் இளம் வீரராக சாதனை படைப்பார். கடைசியாக 2003ல் அமெரிக்க வீரர் யுஎஸ் ஓபனை வென்றிருந்தார்.
நீண்டகாலமாக காத்திருக்கும் இந்தக் கனவை ஷெல்டன் நிறைவேற்றுவாரா என அமெரிக்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் - ரஷியாவின் கரன் கச்சனோவ் மோதினார்கள். இந்தப் போட்டியில் ஸ்வெரெவ் 6-3, 7-6(7), 7-6(6) என நேர் செட்களில் வென்றார்.
இறுதிப் போட்டியில் பென் ஷெல்டன் - ஸ்வெரெவ் மோதுகிறார்கள். இருவருமே தங்களது முதல் யுஎஸ் ஓபன் படத்துக்காக காத்திருக்கிறார்கள் என்பதால், இந்தப் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Shelton reaches the US Open final for the first time! Will he fulfill the long-held dream of Americans?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






