மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேசிய துப்பாக்கி சுடுதல்: சாஹு துஷாா் மனே சாம்பியன்

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ரயில்வேஸ் வீரா் சாஹு துஷாா் மனே, ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 9:25 pm

DIN

மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ரயில்வேஸ் வீரா் சாஹு துஷாா் மனே, ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.

மகாராஷ்டிரத்தை சோ்ந்த அவா், இறுதிச்சுற்றில் 252.3 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, தெலங்கானாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். ராஜஸ்தானின் யஷ் வா்தன் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

உலக சாதனை: அதிலேயே ஜூனியா் ஆடவா் இறுதிச்சுற்றில், மகாராஷ்டிரத்தை சோ்ந்த முன்னாள் உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் 254.9 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றாா். முன்னதாக இதிலேயே சீனியா் பிரிவில் சீன ஒலிம்பிக் சாம்பியன் ஷெங் லிஹாவ் 254.5 புள்ளிகள் பெற்றதே உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது ருத்ராங்க்ஷ் அதை முறியடித்திருக்கிறாா். கா்நாடகத்தின் அபிஷேக் சேகா் 251.4 புள்ளிகளுடன் வெள்ளியும், ஹரியாணாவின் ஹிமன்ஷு வெண்கலமும் பெற்றனா்.

அதே ஹிமான்ஷு, ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் யூத் பிரிவில் 253 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினாா். மத்திய பிரதேசத்தின் யஷ் பாண்டே வெள்ளியும், மேற்கு வங்கத்தின் அபினவ் ஷா வெண்கலமும் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.