இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜாக் லீச் விளையாடுவாரா?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜாக் லீச் விளையாடுவாரா?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளரான ஜாக் லீச்சுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக அவர் நீண்ட நேரம் ஃபீல்டிங்கில் இல்லை. பின்னர், பந்துவீசுவதற்காக மட்டும் இடையில் சிறிது நேரம் களம் கண்டார். 

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணியுடன் அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை. 

ஜாக் லீச் குறித்து இங்கிலாந்து வீரர் ஸாக் கிராலி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜாக் லீச் கலந்துகொள்வாரா எனத் தெரியவில்லை. அவர் அணியில் இல்லையென்றால் அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். போட்டிக்கு முன்பு அவர் எவ்வாறு உணர்கிறார் என்பதைப் பொறுத்து அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்பது தெரியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com