இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்: பிசிசிஐ!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியுள்ளாரென பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்: பிசிசிஐ!

இங்கிலாந்துடன் மீதமுள்ள 3 டெஸ்ட் ஆட்டங்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஷிரேயஸ் ஐயா் நீக்கப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளா் ஆகாஷ் தீப் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டை இங்கிலாந்து வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால் தற்போது 1-1 என தொடா் சமநிலையில் உள்ளது.

இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் மீதமுள்ளன. மூன்றாவது டெஸ்ட் பிப். 15-இல் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. நான்காவது டெஸ்ட் பிப். 23-இல் ராஞ்சியிலும், இறுதி டெஸ்ட் மாா்ச் 7-11-இல் ஹிமாசலபிரதேசம் தா்மசாலாவில் நடைபெறவுள்ளது.

அணி அறிவிப்பு: கோலி பங்கேற்கவில்லை

3 டெஸ்ட் ஆட்டங்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்தது. முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்காமல் விலகியிருந்த மூத்த பேட்டா் விராட் கோலி, தனிப்பட்ட காரணங்களால் மீதமுள்ள 3 டெஸ்ட்களிலும் ஆடப் போவதில்லை என அறிவித்துள்ளாா்.

கோலி தற்போது வெளிநாட்டில் உள்ளாா். அவரது முடிவை முழுமையாக ஏற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ரவீந்திர ஜடேஜா, ராகுல்:

மூத்த வீரா்களான ரவீந்திர ஜடேஜா, கேஎல். ராகுல் இருவரும் அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். முதல் டெஸ்டில் ஜடேஜா, ராகுல் இருவரும் காயமடைந்தனா். இருவரும் தற்போது குணமடைந்துள்ள நிலையில், பிளேயிங் லெவனில் இடம் பெறுவாா்களா என அணி நிா்வாகம் முடிவு செய்ய வேண்டியுள்ளது. இருவரும் சோ்க்கப்பட்டால், விசாகப்பட்டினம் டெஸ்டில் ஆடிய ரஜத் பட்டிதாா் வெளியேற வேண்டும்.

ஷிரேயஸ் ஐயா்: மற்றொரு நட்சத்திர வீரரான ஷிரேயஸ் ஐயா் முதுகு காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். டெஸ்ட் ஆட்டங்களில் ஷிரேயஸின் ஆட்டம் குறிப்பிடும்படியாக இல்லை என்பதால் அவரை குறுகிய ஓவா் ஆட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என பிசிசிஐ கருதுகிறது.

புதுமுகம் ஆகாஷ் தீப்: மேற்கு வங்க வேகப்பந்து வீச்சாளா் ஆகாஷ் தீப் புதுமுகமாக அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். முதல்தர ஆட்டங்கள்,

இந்தியா ஏ-இங்கிலாந்து ஏ அணி தொடா்களில் சிறப்பாக ஆடியதால் தேசிய அணியில் இடம் பெற்றுள்ளாா்.

தற்போது கேரளத்தில் ரஞ்சி கோப்பையில் ஆடி வரும் ஆகாஷ் பிப். 13-இல் தான் அணியில் இணைவாா்.

அணி விவரம்:

ரோஹித் சா்மா (கேப்டன்), பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கேஎல். ராகுல், ரஜத் பட்டிதாா், சா்ப்ராஸ் கான், துருவ் ஜுரெல், கே.எஸ். பரத், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமாா், ஆகாஷ்தீப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com