சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 வீரர்கள்!

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9-வது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் உருவெடுத்துள்ளார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2024, 1:26 pm

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்தார். அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது இந்திய வீரராக அஸ்வின் மாறியுள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9-வது வீரராக அவர் உருவெடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 வீரர்கள்

1.முத்தையா முரளிதரன் (இலங்கை) - 800 விக்கெட்டுகள்

2.ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) - 708 விக்கெட்டுகள்

3.ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) - 695 விக்கெட்டுகள்

4.அனில் கும்ப்ளே (இந்தியா) - 619 விக்கெட்டுகள்

5.ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) - 604 விக்கெட்டுகள்

6.கிளன் மெக்ராத் (ஆஸ்திரேலியா) - 563 விக்கெட்டுகள்

7.கோர்ட்னி வால்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) - 519 விக்கெட்டுகள்

8.நாதன் லயன் (ஆஸ்திரேலியா) - 517 விக்கெட்டுகள்

9.ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 500 விக்கெட்டுகள்

10.டேல் ஸ்டெயின் (தென்னாப்பிரிக்கா) - 439 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.