கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த இலங்கை வீரர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த இலங்கை வீரர்!

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் கொல்கத்தா அணியிலிருந்து விலகியுள்ளார்.
Published on

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கஸ் அட்கின்சனுக்குப் பதிலாக இலங்கை வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் கொல்கத்தா அணியிலிருந்து விலகுவதற்கான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அவருக்குப் பதிலாக இலங்கை வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த இலங்கை வீரர்!
பேஷ்பால் யுக்தியை விளாசும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்!

துஷ்மந்தா சமீரா கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், 2021 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாடினார். 2022 ஆம் ஆண்டு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 12 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

துஷ்மந்தா சமீரா ரூ.50 லட்சத்துக்கு கொல்கத்தா அணியில் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com