பரபரப்பான ஆட்டம்.. நியூசியை வீழ்த்தியது ஆஸி!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 நடைபெற்றது.
பரபரப்பான ஆட்டம்.. நியூசியை வீழ்த்தியது ஆஸி!
Chris Symes

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, தன் முதல் டி20 ஆட்டத்தில் இன்று நியூசிலாந்த் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற நியூசி. அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பின் ஆலன் மற்றும் கான்வே நிதானமான ஆட்டத்துடன் ரன்களையும் குவித்தனர். பின் ஆலன் அவுட் ஆனதும் ரச்சின் ரவிந்தரா, கான்வேவுடன் இணைந்தார். இருவரும் ஆஸி. பந்துவீச்சை சிதறடிக்க அணியின் ரன் வேகம் அதிகரித்தது.

அதிரடியாக விளையாடிய ரச்சின் 35 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து விக்கெட் ஆனார். மறுபுறம் சிறப்பாக ஆடிய கான்வேவும் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் நியூசி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை எடுத்தது.

Chris Symes

216 ரன்கள் இலக்குடன் ஆஸியின் ட்ராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இணை களமிறங்கியது. ஆனால், குறைந்த ரன்னிலேயே டிராவிஸ் அவுட் ஆனார். பின்னர் அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் களமிறங்கி நிதானமாக நியூசி பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டார்.

மறுபுறம் நம்பிக்கையுடன் ஆடி வந்த வார்னர், சாண்டர் பந்துவீச்சில் அவுட் ஆக ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியது. தொடர்ந்து, களமிறங்கிய கிளேன் மேக்ஸ்வெல் 25 ரன்களில் அவுட் ஆனார்.

ஆனால், அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் அரைசதம் அடித்து களத்திலிருந்தார். இறுதியில், 9 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையிலிருந்த ஆஸி அணிக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக டிம் டேவிட் அதிரடியாக சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் திசையை மாற்றினார்.

இறுதி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார் டிம் டேவிட். இந்த பரபரப்பான ஆட்டத்தில் 72 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த மிட்சல் மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com