தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்துள்ளார்.

News image

ரவிச்சந்திரன் அஸ்வின்

Updated On :27 பிப்ரவரி 2024, 1:35 pm

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 35-வது 5 விக்கெட்டுகள் ஆகும். இதன்மூலம், புதிய சாதனை ஒன்றையும் அஸ்வின் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் (35 முறை) வீழ்த்திய இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.

ஒட்டு மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் அஸ்வின் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.