இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மழையின் காரணத்தினால் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று (ஜனவரி 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்து வருகிறது.
ஜிம்பாப்வே அணி 40 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகு சற்று மழை குறைந்துள்ளது. மழையின் காரணத்தினால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டதும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தாமதமானதும் குறிப்பிடத்தக்கது.