பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு  எதிரான டி20 தொடரை நியூசிலாந்து வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு  எதிரான டி20 தொடரை நியூசிலாந்து வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்  இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 12) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. 

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் அப்பாஸ் அஃப்ரிடி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹாரிஸ் ரௌஃப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதனையடுத்து, 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 57 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டிம் சௌதி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆடம் மில்னே மற்றும் பென் சீர்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஈஸ் சோதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இதன்மூலம், பாகிஸ்தானை 46 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. டேரில் மிட்செல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com