இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களை தனது அதிரடியான பேட்டிங்கால் ஜெய்ஸ்வால் திணறடித்ததாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான அக்ஷர் படேல் ஜெய்ஸ்வாலுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இந்த நிலையில், இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களை தனது அதிரடியான பேட்டிங்கால் ஜெய்ஸ்வால் திணறடித்ததாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான அக்ஷர் படேல் ஜெய்ஸ்வாலுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அவர் முதல் ஓவரிலிருந்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை தனது அதிரடியான பேட்டிங்கால் திணறடித்தார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களை ஜெய்ஸ்வால் ஆட்டத்தின்மீது கட்டுப்பாட்டை எடுக்கவிடவில்லை. அதிரடியாக விளையாடி அவர்களது பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

உலகில் மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனைப் படைத்த உத்தரகண்டைச் சேர்ந்த பெண்

‘நீங்கள் பேட்மேனா?’.. ஜென்ஸீக்களின் கேள்விகளுக்கு ராகுல் ‘கலகல’ பதில்!

2-வது ஒருநாள்: இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 300 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



