யு-19 உலகக் கோப்பை: அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்திய அணி!

சூப்பர் 6 சுற்றுக்கு  ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்றையப் போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.
யு-19 உலகக் கோப்பை: அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்திய அணி!

சூப்பர் 6 சுற்றுக்கு  ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்றையப் போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதவுள்ளன. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தியது.

இதன்மூலம் சூப்பர் 6 சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்றது. இந்த நிலையில், ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த அமெரிக்க அணியை இன்று இந்தியா எதிர்கொள்கிறது. 

ஒவ்வொரு குரூப்பிலும் (குரூப் ஏ, பி, சி, டி) முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com