இது தொடர்பாக அவர் பேசியதாவது: கார் விபத்தில் சிக்கியபோது முதல் முறையாக இந்த உலகத்தில் எனக்கான நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். விபத்து ஏற்பட்டபோது எனக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து நான் அறிந்திருந்தேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் பெரிய அளவில் பயப்படும் படியான அளவுக்கு ஒன்றும் ஆகவில்லை. யாரோ ஒருவர் என்னைக் காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயங்களிலிருந்து குணமடைய எவ்வளவு நாள்கள் ஆகும் எனக் கேட்டதற்கு, 16-18 மாதங்கள் ஆகும் என மருத்துவர் கூறிவிட்டார். காயத்திலிருந்து மீண்டு வரும் காலங்கள் கடினமாக இருக்கப்போகிறது எனத் தெரிந்தது என்றார்.