சமீபத்தில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட வீரா்கள் அடங்கிய தனது அணியை ஐசிசி திங்கள்கிழமை அறிவித்தது. அதில், கேப்டன் ரோஹித் சா்மா உள்பட 6 இந்தியா்கள் இடம் பிடித்துள்ளனா்.
ஐசிசி-யின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது. அந்தப் போட்டிக்கான ஐசிசி அணியில், இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, சூா்யகுமாா் யாதவ், ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
ரோஹித் சா்மா போட்டி முழுவதுமாக 257 ரன்கள் சோ்த்து, 156.7 ஸ்டிரைக் ரேட்டுடன் இருக்கிறாா். தொடா் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரீத் பும்ரா 15 விக்கெட்டுகள் சாய்த்ததுடன், எதிரணிகள் ஸ்கோரை கட்டுப்படுத்த உதவியதற்காகவும் தோ்வாகியிருக்கிறாா்.
அதேபோல், நல்லதொரு பேட்டிங் மற்றும் இறுதி ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த கேட்ச் பிடித்ததற்காக சூா்யகுமாா் யாதவ், இறுதி ஆட்டத்தில் ‘த்ரில்’ ஆன கடைசி ஓவரை வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்ததற்காக ஹா்திக் பாண்டியா, தகுந்த நேரத்தில் ஸ்கோா் செய்ததற்காக அக்ஸா் படேல், அருமையாக விக்கெட்டுகள் சாய்த்ததற்காக அா்ஷ்தீப் சிங் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளனா்.
போட்டி முழுவதும் சோபிக்காமல் போன விராட் கோலி, இறுதி ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்ததுடன், ஆட்டநாயகன் விருதும் வென்றாா். எனினும் அவா் ஐசிசி அணியில் இடம்பெறவில்லை.
ஐசிசி அணி: ரோஹித் சா்மா, சூா்யகுமாா் யாதவ், ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் (இந்தியா), ரஹ்மானுல்லா குா்பாஸ், ரஷீத் கான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி (ஆப்கானிஸ்தான்), மாா்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா), நிகோலஸ் பூரன் (மேற்கிந்தியத் தீவுகள்). 12-ஆவது வீரா்: அன்ரிஹ் நோா்கியா (தென்னாப்பிரிக்கா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

13 ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய ‘ரோ - கோ’ மேஜிக்! 2024 டி20 உலகக் கோப்பை ரீவைண்ட்!!

அதிர்ஷ்டமில்லாத டேவிட் மில்லர்..! பங்கேற்ற 12 ஐசிசி கோப்பைகளிலும் தோல்வி!

டி20 உலகக் கோப்பை: ஏ பிரிவில் முதலிடம் யாருக்கு? இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!

பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம்: விராட் கோலி, ரோஹித் தரமிறக்கம்!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

