ஜிம்பாப்வேவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? ஷுப்மன் கில் பதில்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.
ஷுப்மன் கில்
ஷுப்மன் கில் படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று முதல் தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஷுப்மன் கில்
பயிற்சியாளராக ரோஹித் சர்மாவிடம் எதையும் மாற்ற முயற்சிக்கவில்லை: ராகுல் டிராவிட்

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஷுப்மன் கில் பேசியதாவது: நாங்கள் நன்றாக பந்துவீசினோம். ஆனால், பேட்டிங்கில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அனைவரும் சிறிது அவசரமாக விளையாடியது போல தெரிகிறது. பேட்டிங்கில் நேரமெடுத்து சிறப்பாக விளையாடுவது குறித்து பேசினோம். ஆனால், அவ்வாறு நாங்கள் விளையாடவில்லை. ஆட்டத்தின் பாதிக்குள் நாங்கள் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். நான் ஆட்டமிழந்த விதம் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. 116 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது கடைசி வீரர் வரை வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்றையப் போட்டியில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்றார்.

ஷுப்மன் கில்
உலகின் 8ஆவது அதிசயம் பும்ரா! விராட் கோலி புகழாரம்!

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நாளை (ஜூலை 7) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com