
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான ஆா்ஜென்டீனா 2-0 கோல் கணக்கில் கனடாவை வென்று இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் உருகுவே கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் உருகுவே அணியினால் ஒரு கோல்கூட அடிக்கமுடியவில்லை. கொலம்பிய அணி 39ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. பின்னர் 45’+1 நிமிடத்தில் கொலம்பிய வீரருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
இறுதிவரை உருகுவே அணியினால் கோல் அடிக்க முடியாததால் கொலம்பிய அணி 1-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
15 முறை கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற உருகுவே அணி ஒரு கோல்கூட அடிக்காமல் அரையிறுதியில் தோல்வியுற்றது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பிய அணி ஒரேமுறை மட்டுமே கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளது. மாறாக ஆா்ஜென்டீனா 15 முறை கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டி ஜூலை 15 காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.