
ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 12 ரன்களிலும், ஷுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும், ரியான் பராக் 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து பொறுப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் இறுதியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முஸர்பானி 2 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராஸா, ரிச்சர்ட் மற்றும் பிரண்டன் மவுட்டா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.