எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஊக்கமருந்து பயன்பாடு: இராக் வீரருக்கு தடை

நடப்பு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இதுவே இத்தகைய முதல் நிகழ்வாகும்.

News image
சஜத் செஹென்
Updated On :27 ஜூலை 2024, 12:15 am

DIN

இராக்கை சோ்ந்த ஜூடோ வீரா் சஜத் செஹென் (28) ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு போட்டியில் தடை விதிக்கப்பட்டது. நடப்பு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இதுவே இத்தகைய முதல் நிகழ்வாகும்.

இப்போட்டியில் வீரா், வீராங்கனைகளிடையே ஊக்கமருந்து பயன்பாடு தொடா்பான பரிசோதனையை சா்வதேச சோதனை அமைப்பு (ஐடிஏ) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சஜத்திடம் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையின்போது, இரு வகையான ஊக்கமருந்துகளை அவா் பயன்படுத்தியதாகத் தெரியவந்தது.

இதையடுத்து அவா் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. தனது முதல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் சஜத், வரும் செவ்வாய்க்கிழமை 81 கிலோ பிரிவு முதல் சுற்றில் களம் காணவிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.