ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாற்றுத்திறனாளி வீராங்கனை ஜியா ராய் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து சாதனை!

மாற்றுத்திறனாளியான ஜியா ராய் இளம் வயதில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்..

News image

படம் | இந்திய கடற்படை வெஸ்டர்ன் நேவல் கமாண்ட் பிரிவு எக்ஸ் தளப் பதிவு

Updated On :30 ஜூலை 2024, 8:06 am

இளம் வயதில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து உலக சாதனை படைத்தார் இந்தியாவின் ஜியா ராய்

16 வயதே நிரம்பிய மாற்றுத் திறனாளியான ஜியா ராய், பிரிட்டனின் அப்போட்ஸ் கிளிஃப் பகுதியிலிருந்து பிரன்சின் பாய்ண்ட் டே லா கோர்ட்-ட்யூன் பகுதி வரை பாய்ந்தோடும் ஆங்கிலக் கால்வாயின் 34 கி.மீ. தூரத்தை, தனியொரு ஆளாக 17 மணி நேரம் 25 நிமிடங்களில் திங்கள்கிழமை(ஜூலை 29) நீந்திக் கடந்துள்ளார்.

இதன்மூலம், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் உலகின் இளம் வயது பாரா நீச்சல் வீராங்கனை என்ற சாதனையையும், குறைவான நேரத்தில் வேகமாக நீந்திக் கடந்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

ஜியா ராய்

ஜியா ராய் - படம் | இந்திய கடற்படை வெஸ்டர்ன் நேவல் கமாண்ட் பிரிவு எக்ஸ் தளப் பதிவு

சர்வதேச பாரா நீச்சல் வீராங்கனையான ஜியா ராய், முன்னதாக பாக் வளைகுடாவை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜியா ராயின் திறமையையும் சாதனைகளையும் பாராட்டி, இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டோருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘பிரதமர் ராஷ்திரிய பால புரஸ்கார் விருது’ கடந்த 2022-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனது இந்த உலக சாதனை மூலம் ‘ஆட்டிஸம்’ குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை வீரரின் மகளான ஜியா ராயின் உலக சாதனைக்கு இந்திய கடற்படை சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.