சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா நான்காவது இடத்துக்கும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
ஸ்மிருதி மந்தனா 738 புள்ளிகளையும், ஹர்மன்பிரீத் கௌர் 648 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 சதங்கள், 1 அரைசதம் 343 ரன்கள் எடுத்ததன் மூலம் மந்தனா முதல் 10 இடங்களுக்குள் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
தென்னாப்பிரிக்கா அணித்தலைவர் லாரா வோல்வார்ட் மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர்-பிரண்ட் 1வது இடத்தைப் பிடித்தார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை தென்னாப்பிரிக்கா 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில், வால்வார்ட் இரண்டாவது ஆட்டத்தில் 135 ரன்கள் குவித்தார்.
மரிசன்னே இரண்டு இடங்கள் உயர்ந்து ஏழாவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் இந்தியவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் நான்கு இடங்கள் முன்னேறி 29 ஆவது இடத்தையும், தென்னாப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் நோன்குலுலெக் மலாபா ஐந்து இடங்கள் முன்னேறி 22 வது இடத்தையும், சுழற்பந்து வீச்சாளர் கவிஷா தில்ஹாரி, கரீபியன் அணிக்கு எதிராக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 8 இடங்கள் உயர்ந்து 34-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்தியாவின் தீப்தி ஷர்மா 671 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.