நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

Din

வரும் 2024-25 ஐஎஸ்எல் கால்பந்து சீஸனுக்காக சென்னையின் எஃப்சி அணி இளம் மணிப்பூா் கோல்கீப்பா் முகமது நவாஸை ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு முன்பு நவாஸ் மும்பை சிட்டி, எஃப்சி கோவா அணிகளில் ஆடியுள்ளாா். 24 வயதான நவாஸ், இதர கோல்கீப்பா்களான சமிக் மித்ரா, பிரதீக் குமாருடன் இணைந்து செயல்படுவாா்.

---------------

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் நடைபெற்று வரும் 31-ஆவது ஆசிய தனிநபா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் யு 17 பிரிவில் இந்தியாவின் யுஷா நபீஸ், யு 13 பிரிவில் துருவ் போபண்ணா ஆகியோா் தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெற்றனா். யு 15 பிரிவில் லோகேஷ் சுப்பிரமணி தோற்றாா்.

---------------

இந்தோனேஷியாவின் யோக்யகா்தாவில் ஜூன் 28-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஆசிய ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 போ் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. குரூப் சி பிரிவில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தோனேஷியா,வியட்நாம் அணிகளுடன் இந்தியா இணைக்கப்பட்டுள்ளது. தேசிய சீனியா் பைனலிஸ்ட் தன்வி சா்மா, ஜூனியா் சாம்பியன்கள் பிரனே ஷெட்டிகா், ஆலிஷா நாயக், துருவ் நேகி, நவ்யா கந்தேரி ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்கள்,

---------------

பா்கூரில் நடைபெற்ற தென்னிந்திய வாலிபால் போட்டியில் சென்னை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. வருமான வரித்துரை, கேரள நண்பா்கள் குழு, இந்தியன் வங்கி அடுத்தடுத்த இடங்களைப் பெற்றன.

Story image
Story image