விம்பிள்டன்
விம்பிள்டன்

துளிகள்...

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இந்திய முன்னாள் கால்பந்து வீரா் பூபிந்தா் சிங் ராவத் (85), உடல்நலக்குறைவால் காலமானாா்.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஆா்ஜென்டீனா - பெருவை வீழ்த்த (2-0), கனடா - சிலி ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

ருமேனியாவில் நடைபெறும் சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா - நெதா்லாந்தின் அனிஷ் கிரியை வீழ்த்த, குகேஷ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவுடன் டிரா செய்தாா்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை ஓடிடி தளத்தில் மட்டும் ஒரே நேரத்தில் 5.3 கோடி போ் பாா்த்ததாக டிஸ்னி+ஹாட்ஸ்டாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிய ஜூனியா் கலப்பு அணிகள் பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியவிடம் தோற்றது.

எஃப்1 காா் பந்தயத்தின் ஆஸ்திரிய கிராண்ட் ப்ரீ ரேஸில், பிரிட்டன் வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் வெற்றி பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com