ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ரஞ்சி அரையிறுதி: விதர்பா 261 ரன்கள் முன்னிலை!

ரஞ்சி கோப்பையில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விதர்பா 261 ரன்கள் முன்னிலை.

News image
Updated On :4 மார்ச் 2024, 12:18 pm

DIN

ரஞ்சி கோப்பையில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விதர்பா 261 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

ரஞ்சி கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய விதர்பா 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கரூண் நாயர் 63 ரன்கள் எடுத்தார். மத்திய பிரதேசம் தரப்பில் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

மத்திய பிரதேசம் முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹிமான்ஷு மந்த்ரி 126 ரன்கள் எடுத்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். விதர்பா தரப்பில் உமேஷ் மற்றும் யஷ் தாக்குர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் விதர்பா மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 343 ரன்கள் குவித்துள்ளது. யஷ் ரத்தோட் 97 ரன்களுடனும், ஆதித்யா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.