பரபரப்பாக செல்லும் ரஞ்சி அரையிறுதி; இறுதிப்போட்டியில் மும்பையை சந்திக்கப்போவது யார்?

மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
பரபரப்பாக செல்லும் ரஞ்சி அரையிறுதி; இறுதிப்போட்டியில் மும்பையை சந்திக்கப்போவது யார்?

ரஞ்சி கோப்பையில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டிகள் கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் தொடங்கின. விதர்பா மற்றும் மத்திய பிரதேசம் அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 402 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

பரபரப்பாக செல்லும் ரஞ்சி அரையிறுதி; இறுதிப்போட்டியில் மும்பையை சந்திக்கப்போவது யார்?
ஓய்வை அறிவிக்க வற்புறுத்தப்பட்ட நீல் வாக்னர்: முன்னாள் நியூசிலாந்து வீரர்

மத்திய பிரதேசம் முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மத்திய பிரதேசம் 6 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் வெற்றிக்கு கடைசி நாளில் 93 ரன்கள் தேவைப்படுகின்றன. விதர்பா வெற்றி பெற 4 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

தமிழ்நாட்டுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையிலான இந்த விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மும்பை அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரபரப்பாக செல்லும் ரஞ்சி அரையிறுதி; இறுதிப்போட்டியில் மும்பையை சந்திக்கப்போவது யார்?
டெஸ்ட் வரலாற்றில் 4-வது முறை; 100-வது போட்டியில் ஒன்றாக களமிறங்கும் வீரர்கள்!

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி வருகிற மார்ச் 10 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com