தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் பிரபல நடுவர்!

சர்வதேசப் போட்டிகளில் நடுவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல நடுவர் மராய்ஸ் எராஸ்மஸ் தெரிவித்துள்ளார்.

News image
மராய்ஸ் எராஸ்மஸ்
Updated On :7 மார்ச் 2024, 10:57 am

DIN

சர்வதேசப் போட்டிகளில் நடுவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல நடுவர் மராய்ஸ் எராஸ்மஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேசப் போட்டிகளில் நடுவராக எனது பயணம் சிறப்பானதாக அமைந்தது. உலக அளவில் ஐசிசி நடத்தும் போட்டிகளில் நடுவராக பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. கிரிக்கெட் வீரராக இருந்து அதன்பின் நடுவராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நடுவராக பணியாற்றிய ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியானதாக அமைந்தது என்றார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடுவராக தனது பயணத்தைத் தொடங்கிய மராய்ஸ் எராஸ்மஸ் இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் கள நடுவராக செயல்பட்டுள்ளார். பல்வேறு ஐசிசி போட்டிகளில் களநடுவராக செயல்பட்டுள்ளார். நான்கு முறை 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர்களில் (2011, 2015, 2019, 2023) களநடுவராக செயல்பட்டுள்ளார். அதேபோல ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் 7 முறை (2009, 2010, 2012, 2014, 2016, 2021, 2022) கள நடுவராக செயல்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மராய்ஸ் எராஸ்மஸ் நடுவராக செயல்படவுள்ள 380-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.