இந்தியா- இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக திக ரன்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் கோலியை முந்தி ஜெய்ஸ்வால் சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் இன்று (மாா்ச் 7) தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. 57.4 ஓவர்களில் 218 க்கு ஆல் அவுட்டானது. இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4, ஜடேஜா 1 என விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.
தற்போது இந்தியா பேட்டிங் ஆடிவருகிறது. 15 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த இந்தியர்கள் பட்டியலில் (16 இன்னிங்ஸ்) 2வது இடம் வகிக்கிறார் ஜெய்ஸ்வால். வினோத் காம்ளி 14 இன்னிங்ஸுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்தியர்கள்:
ஜெய்ஸ்வால் - 700* (2024)
விராட் கோலி- 655 (2016)
ராகுல் திராவிட் - 602 (2022)
விராட் கோலி- 593 (2018)
விஜய் மஞ்சுரேக்கர் - 586 (1961-62)
சுனில் கவாஸ்கர் - 542 (1979)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் விலகல்; இங்கிலாந்துக்கு பின்னடைவா?









