இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பதிரானா விளையாடுவாரா?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பதிரானா விளையாடுவாரா?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இலங்கை வீரர் மதீஷா பதிரானா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இலங்கை வீரர் மதீஷா பதிரானா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சில ஆட்டங்களில் இலங்கை வீரர் மதீஷா பதிரானா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின்போது பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் இரண்டாவது போட்டியின் பாதியில் பெவிலியன் திரும்பினார். காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிராக இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியிலும் அவர் அணியில் இடம்பெறவில்லை.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பதிரானா விளையாடுவாரா?
நானும் ரோஹித்தும் பிசிசிஐ ஒப்பந்தத்தை முடிவு செய்யவில்லை: ராகுல் டிராவிட்

காயத்திலிருந்து குணமடைய பதிரானாவுக்கு 2 வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com