
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் இணைந்துள்ளார்.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் வங்கதேசம் 328 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் இணைந்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணியில் விளையாடவில்லை. அவர் வங்கதேசம் மற்றும் டாக்கா பிரீமியர் லீக் தொடரில் கடந்த இரண்டு மாதங்களாக விளையாடி வந்தார். தற்போது இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் இணைந்துள்ளார்.
அவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் அயர்லாந்துக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.