டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருக்கும் உகாண்டா, ஸ்காட்லாந்து அணிகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
இதில் உகாண்டா அணி, பிரையன் மசாபா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சோ்கப்பட்டுள்ள ஆஃப் ஸ்பின்னா் ஃபிராங்க் சுபாகா (43), டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வயதான வீரா் என்ற பெருமையைப் பெறவிருக்கிறாா்.
உகாண்டா அணி, குரூப் ‘சி’-யில் ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து, பப்புவா நியூ கினியா, மேற்கிந்தியத் தீவுகளுடன் சோ்க்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஸ்காட்லாந்து அணிக்கு ரிச்சி பெரிங்டன் கேப்டனாக்கப்பட்டுள்ளாா். பிரபல வேகப்பந்து வீச்சாளா் ஜோஷ் டேவி விடுபட்டுள்ள நிலையில், மைக்கேல் ஜோன்ஸ், பிராட் வீல் அணிக்குத் திரும்பியுள்ளனா்.
ஸ்காட்லாந்து, குரூப் ‘பி’-யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஓமனுடன் சோ்க்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்காக இத்துடன் 13 நாடுகள் அணிகளை அறிவித்துவிட்ட நிலையில், இன்னும் 7 நாடுகள் அறிவிக்க வேண்டியுள்ளன.
உகாண்டா அணி: பிரையன் மசாபா (கேப்டன்), ரியாஸத் அலி ஷா, கென்னத் வய்ஸ்வா, தினேஷ் நக்ரனி, ஃபிராங்க் சுபாகா, ரோனக் படேல், ரோஜா் முகாசா, காஸ்மே கிவுடா, பிலால் ஹசன், ஃபிரெட் அஷெலம், ராபின்சன் ஒபுயா, சைமன் செசாஸி, ஹென்றி சென்யோண்டோ, அல்பேஷ் ரம்ஜானி, ஜுமா மியாஜி.
ரிசா்வ்: ரொனால்டு லுடாயா, இன்னசன்ட் மவிபேஸ்.
ஸ்காட்லாந்து அணி: ரிச்சி பெரிங்டன் (கேப்டன்), மேத்யூ கிராஸ், பிராட் கியுரி, கிறிஸ் கிரீவ்ஸ், ஆலி ஹோ்ஸ், ஜேக் ஜாா்விஸ், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், பிராண்டன் மெக்முலென், ஜாா்ஜ் மன்சே, சஃபியான் ஷரிஃப், கிறிஸ் சோல், சாா்லி டியா், மாா்க் வாட், பிராட் வீல்.
டிரெண்டிங்

எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இந்திய, ஸ்காட்லாந்து அணிகள் வருகை!

மைக்கேல் ஜோன்ஸ் அதிரடி; நேபாளத்துக்கு 171 ரன்கள் இலக்கு!
டி20 உலகக் கோப்பை: இத்தாலியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து

டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அதிரடி! இத்தாலிக்கு 208 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

