இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

Published On :

அஸ்தானா: கஜஸ்தானில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

இதையடுத்து, போட்டியில் மொத்தமாக இந்தியா 12 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களுடன், 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.

ஆடவருக்கான 48 கிலோ பிரிவில், தமிழகத்தின் விஸ்வநாத் சுரேஷ் 5-0 என கஜகஸ்தானின் கரப் யெர்னாரை வீழ்த்த, 57 கிலோ பிரிவில் நிகில் "ஆர்எஸ்சி' முறையில் கஜகஸ்தானின் சபைர் யெர்போலாத்தை தோற்கடித்தார். 60 கிலோ பிரிவில் ஆகாஷ் கோர்கா 4-1 என உள்நாட்டு வீரர் ரஸ்லான் குஸ்பயேவை வென்றார்.

மகளிருக்கான 54 கிலோ பிரிவில் பிரீத்தி 3-0 என கஜகஸ்தானின் பஸாரோவா எலினாவை வீழ்த்த, 57 கிலோ பிரிவில் பூனம் புனியா 4-1 என கஜகஸ்தானின் சகிஷ் அனெலையும், 63 கிலோ பிரிவில் பிராச்சி அதே கணக்கில் கஜகஸ்தானின் அனார் தர்சின்பெக்கையும் சாய்த்தனர். 75 கிலோ பிரிவில் முஸ்கான் 3-2 என்ற புள்ளிகளில் உஸ்பெகிஸ்தானின் ஜோகிரோவா அஸிராவை வென்றார்.

இதனிடையே, பிரீத் மாலிக் (67 கிலோ), குட்டீ (48 கிலோ), தமன்னா (50 கிலோ), சானே (70 கிலோ), அல்ஃபியா பதான் (81 கிலோ) ஆகியோர் இறுதிச்சுற்றில் வீழ்ந்து வெள்ளி பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.