2-வது டி20: அயர்லாந்து பேட்டிங்; தொடரைக் கைப்பற்றுமா?

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
 2-வது டி20: அயர்லாந்து பேட்டிங்; தொடரைக் கைப்பற்றுமா?
படம் | அயர்லாந்து கிரிக்கெட் (எக்ஸ்)

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது.

 2-வது டி20: அயர்லாந்து பேட்டிங்; தொடரைக் கைப்பற்றுமா?
வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, அயர்லாந்து முதலில் பேட் செய்கிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்றதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு அயர்லாந்து அணியும், தொடர் இழப்பை தடுக்கும் முனைப்போடு பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com