மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

News image
- படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் (எக்ஸ்)
Updated On :12 மே 2024, 10:17 am

DIN

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே 4 போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்மதுல்லா 54 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் முஸராபானி மற்றும் பிரியன் பென்னட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மஸகட்ஸா மற்றும் ஜோங்வி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய பிரியன் பென்னட் 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய கேப்டன் சிக்கந்தர் ராஸா 46 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் ஜிம்பாப்வே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

பிரியன் பென்னட் ஆட்டநாயகனாகவும், டஸ்கின் அகமது தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.