
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (மே 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் பேட் செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லோர்கான் டக்கர் 41 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஆண்ட்ரூ பல்பிர்னி 35 ரன்களும், ஹாரி டெக்டார் 30 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷகின் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், முகமது அமீர் மற்றும் இமாத் வாசிம் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.