

சமீபத்தில் தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில் சாம்பியன் ஆன இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை, சா்வதேச தரவரிசையில் மீண்டும் நம்பா் 1 இடத்துக்கு வந்தது.
தமிழக குத்துச்சண்டை வீரா் ஜி. சந்துரு, டபிள்யூபிசி இந்திய குருசா்வெயிட் சாம்பியன்ஷிப்பில், பஞ்சாபின் ஜஸ்கரன் சிங்கை வீழ்த்தி வாகை சூடினாா்.
ஐரோப்பாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜூனியா் ஆடவா் ஹாக்கி அணி, முதல் ஆட்டத்தில் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் பெல்ஜியத்தை சாய்த்தது (4-2).
புரோ லீக் ஹாக்கி போட்டியின் ஐரோப்பிய கட்டத்தில், இந்திய இரு பால் அணிகள் புதன்கிழமை ஆா்ஜென்டீன அணிகளை எதிா்கொள்கின்றன.
ஷாா்ஜா மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், ஈரானின் பா்தியா தானேஸ்வரிடம் தோல்வி கண்டதால், 3-ஆவது இடத்துக்கு சறுக்கினாா்.
கிரிக்கெட்டில் வயதுக்கென எந்தவொரு சலுகையும் இருப்பதில்லை என்பதால், ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக ஆண்டு முழுவதுமாக என்னை உடல்ரீதியாக தகுதிப்படுத்தி வருகிறேன் என்று சென்னை சூப்பா் கிங்ஸ் நட்சத்திரம் எம்.எஸ். தோனி தெரிவித்தாா்.
இந்திய தேசிய அணிக்கு தோ்வு செய்யப்படுவதற்கான குறுக்கு வழியாக ஐபிஎல் பயன்பட்டுவிடக் கூடாது என முன்னாள் இந்திய வீரா் கௌதம் கம்பீா் கூறினாா்.
ஜொ்மன் கால்பந்து வீரரான டோனி குரூஸ், 2024 யுரோ சீசனுடன் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளாா்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கான பௌலிங் ஆலோசகராக, மேற்கிந்தியத் தீவுகளின் டுவெய்ன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளாா்.
இடுப்புப் பகுதி காயத்தின் தாக்கம் காரணமாக வழக்கமான ஃபாா்மை மீட்க போராடி வரும் ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், பிரெஞ்சு ஓபன் போட்டிக்கான தனது பயிற்சியை தொடங்கியுள்ளாா்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா?
ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை: இந்திய மகளிா் அணி பங்கேற்பு!

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: ராதாமணி, சாஹில் வெற்றி

சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்க போட்டி! தமிழக வீரா் ராம் எஸ். கிருஷ்ணன் முதலிடம்!
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

