அமெரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் கிருஷா வா்மா தங்கப் பதக்கம் வென்றாா். மேலும் 5 இந்தியா்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில், கிருஷா வா்மா 5-0 என்ற கணக்கில் ஜொ்மனியின் சைமன் லெரிகாவை வீழ்த்தி வாகை சூடினாா். இதர இறுதிச்சுற்றுகளில், 48 கிலோ பிரிவில் சாஞ்சல் சௌதரி இறுதிச்சுற்றில் தகுதிநீக்கமாகி வெள்ளி பெற்றாா். 57 கிலோ பிரிவு இறுதியில் அஞ்சலி குமாரி சிங் 0-5 என இங்கிலாந்தின் மியா டியா அய்டனிடமோ தோல்வியைத் தழுவி 2-ஆம் இடம் பிடித்தாா்.
60 கிலோ பிரிவில் வினி 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்தின் எலா லான்ஸ்டேலிடம் தோற்றாா். 70 கிலோ பிரிவில் அகங்க்ஷா பலாஸ்வல் 1-4 என இங்கிலாந்தின் லில்லி டீகனிடமும், ஆடவா் 75 கிலோ பிரிவில் ராகுல் குண்டூ 1-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் அவினோங்யா ஜோசஃபிடமும் தோல்வியைத் தழுவினா்.
இவா்கள் தவிர, மேலும் 6 இந்தியா்கள் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றில் களம் காணவுள்ளதால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.