
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான டி35 200 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன்மூலம், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை என்ற சாதனையை பிரீத்தி பால் பெற்றுள்ளார்.
மகளிருக்கான டி35 200 மீட்டா் ஓட்டத்தில் 30.01 விநாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாம் இடம் பிடித்தார் பிரீத்தி. சீன வீராங்கனைகள் இருவர் முறையே 28.15 மற்றும் 29.09 விநாடிகளில் இலக்கை அடைந்து முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
பாரீஸில் கடந்த வாரம் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு தங்கம் உள்பட 4 பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தினர்.
இதுவரை ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றிருந்த நிலையில், மகளிருக்கான டி35 200 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் மொத்தம் 7 பதக்கங்களுடன் பட்டியலில் இந்திய அணி 27-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான டி35 100 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில், நடப்பு சாம்பியனான அவனி லெகாரா மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.