
யுஎஸ் ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றாா்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஆரம்ப முதலே சின்னர் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் அவர், 6-3, 6-4, 7-5 என்கிற நேர் செட்களில் டெய்லரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அமெரிக்க ஓபனை வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஏற்கெனவே ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஜானிக் சின்னர் வென்றுள்ள நிலையில் நடப்பாண்டில் அவர் வெல்லும் 2 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.