பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முதல் இன்னிங்ஸ்: இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி ஸ்கோர் பற்றி...

News image
அஸ்வின்- PTI
Updated On :20 செப்டம்பர் 2024, 5:57 am

DIN

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மேலும், முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி வருகின்றனர்.

டாப் ஆர்டர்கள் சொதப்பல்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 19) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மட்டும் 56 ரன்கள் குவிக்க, ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் ஆகியோர் ஒன்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

ரிஷப் பண்ட் 36, கே.எல்.ராகுல் 16 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய அஸ்வினும் ஜடேஜாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அஸ்வின் சதமடித்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது இந்திய அணி. அஸ்வின் 102 ரன்களுடனும் (10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) , ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடனும் (10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) களத்தில் இருந்தனர்.

ஆல் அவுட்

இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியவுடன் டஸ்கின் அகமத் ஜடேஜா, அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தினார்.

91.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113, ஜடேஜா 86 ரன்கள் குவித்தனர்.

வங்கதேசத்தின் மெஹிதி ஹாசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.