விளையாட்டு அமைச்சகத்துக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு

நிகழாண்டு பட்ஜெட்டில் விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு ரூ.3,442.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.3,396.96 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு ரூ.45.36 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ள
விளையாட்டு அமைச்சகத்துக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு
Published on
Updated on
2 min read

நிகழாண்டு பட்ஜெட்டில் விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு ரூ.3,442.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.3,396.96 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு ரூ.45.36 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அதில், ‘பாரீஸில் நிகழாண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்துவதே 2024-25-ஆம் நிதியாண்டின் முக்கிய நோக்கமாக உள்ளது.

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரா்களுக்கான உபகரணங்கள் வழங்குதல், தேசிய அளவிலான முகாம் அமைத்தல், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற பணிகளில் இந்திய விளையாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆணையத்துக்கு கடந்த ஆண்டு ரூ.795.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து நிகழாண்டு கூடுதலாக ரூ.26.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு ரூ.325 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு கூடுதலாக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்துக்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட ரூ.2.5 கோடி கூடுதலாகும்.

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்திற்கு கடந்த ஆண்டு ரூ.21.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நிகழாண்டு ரூ.22.30 கோடி ஒதுக்கப்படுகிறது.

தேசிய விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு கடந்த ஆண்டு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு ரூ.8 கோடி ஒதுக்கப்படுகிறது. தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஆண்டு ரூ.83.21 கோடி ஒதுக்கப்பட்டது. நிகழாண்டு இத்தொகை ரூ.91.90 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ.84 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.39 கோடியாக குறைக்கப்படுகிறது. அதேபோல் தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.46 கோடி தற்போது ரூ.18 கோடியாக குறைக்கப்படுகிறது. பண்டித தீனதயாள் தேசிய விளையாட்டு வீரா்களுக்கான நலத் திட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் விளையாட்டு மேம்பாட்டுக்காக ரூ.20 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8 கோடியாக குறைக்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி கடந்த ஆண்டு ரூ.15 கோடியாக இருந்த நிலையில் நிகழாண்டு ரூ.1 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு
பட்ஜெட் உரையின்போது தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் பெயரைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.
விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் குறித்து அவர் பேசியதாவது:
நமது இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். ஆசிய விளையாட்டு, ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களைக் குவித்தது.
செஸ் விளையாட்டில் வியத்தகு திறமையாளரான நமது நாட்டின் பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுக்கு கடும் சவால் அளித்தார். 2010-ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 20 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் இருந்த நிலையில் இப்போது 80-க்கும் மேற்பட்ட கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com