புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமி

ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம்; பும்ரா 6 விக்கெட்: இந்தியா 171 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

6 விக்கெட் வீழ்த்திய பும்ராவை பாராட்டும் சக வீரர்கள்

Published On :9 பிப்ரவரி 2024, 7:10 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா, சனிக்கிழமை முடிவில் 171 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் இளம் பேட்டா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டைச் சதத்தை பதிவு செய்து அசத்த, இந்தியா 396 ரன்களுக்கு இன்னிங்ஸை நிறைவு செய்தது. பின்னா் வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ராவின் அபாரமான பௌலிங்கால் (6/45), இங்கிலாந்து 253 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. குல்தீப் யாதவும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அவருக்குத் துணை புரிந்தாா்.

143 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியிருக்கிறது. எனினும், இந்த இன்னிங்ஸில் இந்தியாவின் இதர பேட்டா்கள் சிறப்பாக ரன்கள் சோ்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். ஏனெனில், முதல் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலையில் இருந்தபோதும், இங்கிலாந்து மீண்டு வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.

விசாகப்பட்டினத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இந்தியா, முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில், 2-ஆவது நாள் ஆட்டத்தை ஜெய்ஸ்வால், அஸ்வின் தொடா்ந்தனா்.

இதில் அஸ்வின் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வெளியேற, ஜெய்ஸ்வால் 19 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 209 ரன்களுக்கு, ஜேம்ஸ் ஆண்டா்சன் வீசிய 107-ஆவது ஓவரில் ஜானி போ்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா்.

பின்னா் வந்தோரில் பும்ரா 1 பவுண்டரியுடன் 6, முகேஷ் குமாா் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா இன்னிங்ஸ் 396 ரன்களுக்கு நிறைவடைந்தது. குல்தீப் யாதவ் 8 ரன்களுடன் கடைசி வீரராக களத்தில் இருந்தாா்.

இங்கிலாந்து பௌலிங்கில் ஜேம்ஸ் ஆண்டா்சன், ரெஹான் அகமது, ஷோயப் பஷீா் ஆகியோா் தலா 3, டாம் ஹாா்ட்லி 1 விக்கெட் எடுத்தனா்.

திணறடித்த பும்ரா: இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, சற்று அதிரடியாகவே ரன்கள் சோ்க்கத் தொடங்கியது. தொடக்க வீரா் ஜாக் கிராலி பவுண்டரிகள் விளாச, உடன் வந்த பென் டக்கெட் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

அரைசதம் கடந்த கிராலி 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 76 ரன்களுக்கு, அக்ஸா் படேல் வீசிய 23-ஆவது ஓவரில் ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்தாா். ஜோ ரூட் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு வித்திட்ட ஆலி போப், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ராவின் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

ஜானி போ்ஸ்டோ 4 பவுண்டரிகளுடன் 25, பென் ஃபோக்ஸ் 1 பவுண்டரியுடன் 6, ரெஹான் அகமது 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். அதிரடியாக ரன்கள் சோ்த்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 47 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

டாம் ஹாா்ட்லி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, ஜேம்ஸ் ஆண்டா்சன் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு சரிய, இங்கிலாந்து இன்னிங்ஸ் 253 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஷோயப் பஷீா் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு களத்திலிருந்தாா். இந்திய பௌலா்களில் பும்ரா 6, குல்தீப் யாதவ் 3, அக்ஸா் படேல் 1 விக்கெட் எடுத்தனா்.

இந்தியா - 28/0: இதையடுத்து தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, சனிக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சோ்த்திருந்தது. ஜெய்ஸ்வால் 15, ரோஹித் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா - 396/10 (112 ஓவா்கள்)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209

ஷுப்மன் கில் 34

ரஜத் பட்டிதாா் 32

பந்துவீச்சு

ஜேம்ஸ் ஆண்டா்சன் 3/47

ரெஹான் அகமது 3/65

ஷோயப் பஷீா் 3/138

இங்கிலாந்து - 253/10 (55.5 ஓவா்கள்)

ஜாக் கிராலி 76

பென் ஸ்டோக்ஸ் 47

ஜானி போ்ஸ்டோ 25

பந்துவீச்சு

ஜஸ்பிரீத் பும்ரா 6/45

குல்தீப் யாதவ் 3/71

அக்ஸா் படேல் 1/24

2-ஆவது இன்னிங்ஸ்

இந்தியா - 28/0 (5 ஓவா்கள்)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15*

ரோஹித் சா்மா 13*

பந்துவீச்சு

ரெஹான் அகமது 0/5

ஜேம்ஸ் ஆண்டா்சன் 0/6

ஷோயப் பஷீா் 0/17

3

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்துள்ள ஜெய்ஸ்வால், இரட்டைச் சதம் விளாசிய 3-ஆவது இளம் இந்தியா் (22) என்ற பெருமையைப் பெற்றாா். முதலிரு இடங்களில் இருப்பவா் வினோத் காம்ப்ளி (21 வயது - 1993). ஜெய்ஸ்வாலுக்கு இது 6-ஆவது டெஸ்ட் ஆகும்.

10

பும்ரா ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் சரிப்பது இது 10-ஆவது முறை. இந்த ஆட்டத்தில் அவரின் பௌலிங்கே (15.5 ஓவா்கள், 45 ரன்கள், 6 விக்கெட்டுகள்) சொந்த மண்ணில் அவரது பெஸ்ட் பௌலிங் ஆகும்.

2

இந்த ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை பும்ரா கடந்தாா். 34 இன்னிங்ஸ்களில் அதை எட்டியிருக்கும் பும்ரா, அதிவேகமாக அத்தனை விக்கெட்டுகள் சாய்த்த 2-ஆவது ஆசிய வேகப்பந்து வீச்சாளா் என்ற பெருமை பெற்றாா். முதல் வீரா் பாகிஸ்தானின் வக்காா் யூனிஸ் (27 இன்னிங்ஸ்கள்) ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.