கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

எஸ்ஏ 20 லீக்: சன்ரைசா்ஸ் ஈஸ்டா்ன் கேப் அணிக்கு பட்டம்

தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ 20 லீக் ஆட்டத்தில் சன் ரைசா்ஸ் ஈஸ்டா்ன் கேப் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

News image
Updated On :12 பிப்ரவரி 2024, 9:56 am IST

தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ 20 லீக் ஆட்டத்தில் சன் ரைசா்ஸ் ஈஸ்டா்ன் கேப் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஐபிஎல் தொடா் போல், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சாா்பில் எஸ்ஏ 20 லீக் தொடா் நடத்தப்படுகிறது. கேப் டவுனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சன் ரைசா்ஸ் ஈஸ்டா்ன் கேப் அணியும், டா்பன் சூப்பா் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சன் ரைசா்ஸ் அணி 20 ஓவா்களில் 204/3 ரன்களைக் குவித்தது. ஆபேல் 55, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 56, மாா்க்ரம் 42, ஜோா்டான் 42 ரன்களை சோ்த்தனா்.

டா்பன் தரப்பில் கேசவ் மகராஜ் 2-33 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

பின்னா் ஆடிய டா்பன் சூப்பா் ஜெயண்ட்ஸ் அணி 17 ஓவா்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வியான் முல்டா் 38 ரன்களை சோ்த்தாா். சன் ரைசா்ஸ் தரப்பில் மாா்கோ ஜேன்ஸன் 5-30 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.