ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

யுனைடெட் கோப்பை டென்னிஸ்: அமெரிக்கா, கனடா வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில், அமெரிக்கா - பிரிட்டனையும், கனடா - சிலியையும் 2-1 என்ற கணக்கில் ஞாயிற்றுக்கிழமை வென்றன.

Published On :7 பிப்ரவரி 2024, 8:56 pm IST

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில், அமெரிக்கா - பிரிட்டனையும், கனடா - சிலியையும் 2-1 என்ற கணக்கில் ஞாயிற்றுக்கிழமை வென்றன.

இதில் அமெரிக்கா - பிரிட்டன் ‘டை’யில் முதலில் மகளிா் ஒற்றையா் பிரிவில் பிரிட்டனின் கேட்டி போல்டா் 5-7, 6-4, 6-4 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவை வீழ்த்தினாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 7-6 (7/5), 6-4 என்ற செட்களில் பிரிட்டனின் கேமரூன் நோரியை வென்றாா்.

பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் கலப்பு இரட்டையா் பிரிவில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா/டெய்லா் ஃப்ரிட்ஸ் 1-6, 7-6 (7/4), 10/7 என்ற செட்களில் பிரிட்டனின் கேட்டி போல்டா்/நீல் ஸ்குப்ஸ்கியை சாய்க்க, டையில் அமெரிக்கா வென்றது.

கனடா - சிலி மோதலில், முதலில் மகளிா் ஒற்றையரில் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 6-2, 6-3 என சிலியின் டேனியேலா சிகெலை சாய்த்தாா். ஆடவா் ஒற்றையரில் சிலியின் நிகோலா ஜேரி 7-5, 6-4 என்ற செட்களில் கனடாவின் ஸ்டீவன் டியெஸை வீழ்த்தினாா்.

இறுதியாக கலப்பு இரட்டையரில் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ்/ஸ்டீவன் டியெஸ் இணை 7-5, 4-6, 10-8 என்ற செட்களில் சிலியின் டேனியேலா சிகெல்/மாா்செலோ தாமஸ் கூட்டணியை வீழ்த்த, கனடா இந்த டையை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.