ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிற பாகிஸ்தான் அணி 3வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பாக அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 88, ஆமிர் ஜமால் 82 , ஆஹா சல்மான் 52 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மிட்செல் ஸ்ட்ராக் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்.
இதையும் படிக்க: சிராஜ் மிரட்டல் பௌலிங்: 55 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

பாட் கம்மின்ஸ்
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி ஒரு ஓவருக்கு 6 ரன்கள் எடுத்திருக்கையில் முதல்நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஆஸி. 307 ரன்கள் பின்தங்கியுள்ளது.
வார்னருக்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் பேட்டிங் ஆடும்போது சிறப்பு வரவேற்பினை இரண்டு அணியினரும் வழங்கினார்கள்.

தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







