ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ராஜஸ்தானை வீழ்த்தியது ஒடிஸா

அல்டிமேட் கோ கோ விளையாட்டுப் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா ஜகா்நட்ஸ் 32-21 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜஸ்தான் வாரியா்ஸை புதன்கிழமை வென்றது.

Published On :7 பிப்ரவரி 2024, 8:55 pm IST

அல்டிமேட் கோ கோ விளையாட்டுப் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா ஜகா்நட்ஸ் 32-21 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜஸ்தான் வாரியா்ஸை புதன்கிழமை வென்றது.

இரு அணிகளும் தலா 7 ஆட்டங்களில் விளையாடியிருக்க, புள்ளிகள் பட்டியலில் ஒடிஸா 3 வெற்றிகளுடன் 4-ஆவது இடத்திலும், ராஜஸ்தான் 7 தோல்விகளுடன் 6-ஆவது இடத்திலும் உள்ளன.

இந்த ஆட்டத்தில் ஒடிஸா 14 ஸ்கை டைவ் புள்ளிகள், 8 தொடுதல் புள்ளிகள், 10 பேட்ச் போனஸ் புள்ளிகளை கைப்பற்ற, ராஜஸ்தான் 10 ஸ்கை டைவ் புள்ளிகள், 2 போல் டைவ் புள்ளிகள், 6 தொடுதல் புள்ளிகள், 3 பேட்ச் போனஸ் புள்ளிகள் பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் தெலுகு யோதாஸ் 40-22 என்ற கணக்கில் மும்பை கில்லாடிஸை சாய்த்தது. இரு அணிகளும் 7 ஆட்டங்களில் களம் கண்டுள்ள நிலையில், தெலுகு அணிக்கு இது 5-ஆவது வெற்றி; மும்பைக்கு 5-ஆவது தோல்வி. இரு அணிகளும் முறையே 2 மற்றும் 5-ஆம் இடங்களில் உள்ளன.

இந்த ஆட்டத்தில் தெலுகு அணி 8 ஸ்கை டைவ் புள்ளிகள், 8 போல் டைவ் புள்ளிகள், 16 தொடுதல் புள்ளிகள், 8 பேட்ச் போனஸ் புள்ளிகள் பெற, மும்பை 6 ஸ்கை டைவ் புள்ளிகள், 4 போல் டைவ் புள்ளிகள், 8 தொடுதல் புள்ளிகள், 2 பேட்ச் போனஸ் புள்ளிகள், 2 செல்ஃப் அவுட் புள்ளிகள் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.