உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று: ருத்ராங்க்ஷ்/மெஹுலி இணைக்கு தங்கம்

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல்/மெஹுலி கோஷ் இணை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:52 pm IST


ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல்/மெஹுலி கோஷ் இணை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். 

இறுதிச்சுற்றில் அந்த இணை 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஷென் யுஃபான்/ஜு மிங்ஷுவாய் கூட்டணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. முன்னதாக தகுதிச்சுற்றில் ருத்ராங்க்ஷ்/மெஹுலி இணை 631.3 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு இந்திய ஜோடியான இளவேனில் வாலறிவன்/அர்ஜுன் பபுதா, 632.3 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தனர். 

ருத்ராங்க்ஷ், மெஹுலி கோஷ் ஏற்கெனவே பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதிபெற்றவர்களாவர். 

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் சீமா/ரிதம் சங்வான் இணை 11-17 என வியத்நாமின் து வின் டிரின்/காங் ஹய் பாம் இணையிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.  

இதனிடையே, ஜூனியர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இஷா அனில் தக்சேல்/உமாமகேஷ் மத்தினேனி கூட்டணி 17-11 என்ற புள்ளிகளில் சீனாவின் சு ஜிகிங்/பன் போவன் இணையை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றியது. மற்றொரு இந்திய ஜோடியான அபினவ் ஷா/அன்வி ரத்தோட் 16-10 என இந்தோனேசியாவின் மசாயு புத்ரி/பஸ்கலிஸ் ஸ்டீவன் கூட்டணியை சாய்த்து வெண்கம் பெற்றனர். 
இத்துடன் இப்போட்டியில் இந்தியர்கள் என்ற பதக்கங்களின் எண்ணிக்கை, 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.