உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

வினா - விடை வங்கி.... தென்னிந்தியப் புதிய அரசுகள்; பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்!

தென்னிந்தியப் புதிய அரசுகள்; பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் வினா - விடை வங்கி....

படம் | செய்யறிவு

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:12 pm IST

1. சோழ அரசை மீண்டும் உயிர்பித்தவர் யார்?

விஜயாலய சோழன்

2. தஞ்சாவூரை வெற்றிகொண்டு அதனை சோழர்களின் தலைநகராக மாற்றியவர் யார்?

விஜயாலய சோழன்

3. கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் யார்?

முதலாம் இராஜேந்திர சோழன்

4. சோழ அரசின் மிகவும் சக்தி வாய்ந்த அரசர் யார்?

முதலாம் இராஜராஜ சோழன்

5. தஞ்சை பெரிய கோவிலின் மற்றொரு பெயர் என்ன?

ராஜராஜேஷ்வரம் கோவில்

6. தனக்குத் தானே கங்கைகொண்டான் என்ற பட்டம் கொடுத்துக் கொண்ட சோழ அரசன் யார்?

முதலாம் ராஜேந்திர சோழன்

7. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டியது யார்? எதற்காக?

முதலாம் இராஜேந்திர சோழன், வட இந்தியாவில் பெற்ற வெற்றிகளின் நினைவாக

8. தனது கடற்படை பலத்தினால் சுமத்ராவின் ஸ்ரீ விஜயா பேரரசை வென்றவர் யார்?

முதலாம் ராஜேந்திர சோழன்

9. யாருடைய ஆட்சிக் காலத்தில் கிழக்கு சாளுக்கியர்களுடன் சோழர்கள் திருமண பந்தத்தை ஏற்படுத்தினர்?

முதலாம் ராஜராஜசோழன்

10. குந்தவையை மணம் புரிந்த சாளுக்கிய இளவரசர் யார்?

விமலாதித்யன்

11. குந்தவை - விமலாதித்யனின் மகன் பெயர் என்ன?

ராஜராஜ நரேந்திரா

12. ராஜேந்திர சோழனின் மகளின் பெயர் என்ன?

அம்மங்காதேவி

13. ராஜராஜ நரேந்திரா - அம்மங்காதேவியின் மகன் யார்?

முதலாம் குலோத்துங்கன்

14. யாருடைய இறப்புக்குப் பிறகு விஜயாலயனின் கீழ் உயிர்பெற்ற சோழ அரசு முடிவுக்கு வந்தது?

ஆதிராஜேந்திர சோழன்

15. சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு?

1279

16. சோழர்களின் கடைசி அரசர் யார்?

மூன்றாம் ராஜேந்திர சோழன்

17. சோழர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பாண்டிய மன்னன் யார்?

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

18. உத்திரமேரூர் தமிழத்தின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

காஞ்சிபுரம்

19. சோழர்களின் காலத்தில் எத்தனை வார்டுகள் இருந்தன?

30 வார்டுகள்

20. தேர்தலில் போட்டியிட சோழர்கள் காலத்தில் தகுதியான வயது?

35 - 70 வயது

21. சோழர்கள் காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் எவை?

1. வேத நூல்களில் புலமை

2. சொந்த நிலம் & வீடு

3. 35 - 70 வயது

22. சோழர்களுக்கு எதிலிருந்து பிரதான வருவாய் கிடைத்தது?

நிலவரி

23. நிலவரி சோழர்கள் காலத்தில் எவ்வாறு அறியப்பட்டது?

காணிக்கடன்

24. சோழர்கள் காலத்தில் விளைச்சலில் எத்தனை பங்கு நிலவரியாக பெறப்பட்டது?

மூன்றில் ஒரு பங்கு

25. வேதங்கள் கற்க கல்லூரியை உருவாக்கிய சோழ அரசர் யார்?

முதலாம் ராஜேந்திர சோழன்

26. முதலாம் ராஜேந்திர சோழன் வேத கல்லூரியை நிறுவிய இடம்?

எண்ணாயிரம், விழுப்புரம்

27. சோழர்கள் காலத்தில் வேத கல்லூரிகள் நிறுவப்பட்ட இடங்கள்?

திருபுவனை, புதுச்சேரி (1048)

திருமுக்கூடல், செங்கல்பட்டு (1067)

28. சோழர்கள் காலத்தில் உருவான மிகப் பெரிய இலக்கிய படைப்புகள் எவை?

1. பெரியபுராணம்

2. கம்பராமாயணம்

29. சோழர்கள் காலத்தில் இரண்டு குழுக்களின் கீழ் வணிகம் நடைபெற்றது. அவை யாவை?

அஞ்சுவண்ணத்தார் & மணிகிராமத்தார்

30. அஞ்சு வண்ணத்தார் மற்றும் மணிகிராமத்தார் ஒருங்கிணைக்கப்பட்டு இவ்வாறு அழைக்கப்பட்டனர்?

ஐநூற்றுவர் & திசை ஆயிரத்து ஐநூற்றுவர்

31. பாண்டியர்களின் ஆரம்பகால தலைநகரம் எது?

கொற்கை

32. பாண்டியர்களின் நிலப்பரப்பை களப்பிரர்களிடமிருந்து மீட்டவர் யார்?

கடுங்கோன்

33. அரிகேசரி மாறவர்மன் யாருடைய சமகாலத்தவர்?

முதலாம் மகேந்திரவர்மன் & முதலாம் நரசிம்மவர்மன்

34. கூன் பாண்டியன் என அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்?

அரிகேசரி மாறவர்மன்

35. அரிகேசரி மாறவர்மனை சமணத்திலிருந்து சைவத்துக்கு மாற்றியவர் யார்?

சைவ துறவி திருஞானசம்பந்தர்

36. சமணர்களை கொன்று குவித்த பாண்டிய மன்னன் யார்?

அரிகேசரி மாறவர்மன்

37. வேள்விக்குடி பட்டயங்களை கொடையாக வழங்கிய பாண்டிய மன்னன் யார்?

ஜதில பராந்தாக நெடுஞ்சடையான் (முதலாம் வரகுணா?

38. பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னர்கள் யார்?

ஸ்ரீ மார வல்லபா & இரண்டாம் வரகுணா

39. பாண்டிய மன்னன் இரண்டாம் ராஜசிம்ஹனை தோற்கடித்த சோழ மன்னன் யார்?

முதலாம் பராந்தக சோழன்

40. கடுங்கோன் உயிர்பித்த பாண்டிய அரசு யாருடைய தோல்வியுடன் முடிவுக்கு வந்தது?

இரண்டாம் ராஜசிம்ஹன்

41. பாண்டியர்கள் ஆட்சியில் காயல்பட்டினத்துக்கு வந்த வெனிசு நகரப் பயணி யார்?

மார்கோபோலோ

42. வெனிசு நகரப் பயணி மார்கோபோலோ எத்தனை முறை காயல்பட்டினத்துக்கு வந்தார்?

இரண்டு முறை (1288 & 1293)

43. உலகிலேயே மிகவும் பணக்கார அரசு என எந்த அரசினை மார்கோபோலோ கூறினார்?

பாண்டிய அரசு

44. மார்கோபோலோ அவரது பயணக் குறிப்பில் குறிப்பிட்ட இரண்டு சமூகக் கொடுமைகள்?

1. சதி

2. பலதார மணம்

45. எந்த பாண்டிய மன்னனின் மேலாதிக்கத்தை மலநாடு சேர மன்னன் ஏற்றுக் கொண்டார்?

சடையவர்மன் சுந்தரபாண்டியன்

46. தமிழ்நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பாண்டிய மன்னன் யார்?

சடையவர்மன் சுந்தரபாண்டியன்

47. அரியணை ஏறுவதற்கான புரட்சியில் அலாவுதீன் கில்ஜியிடம் அடைக்கலம் புகுந்த பாண்டிய மன்னன் யார்?

சுந்தரபாண்டியன்

48. மதுரை மீது படையெடுத்த அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி யார்?

மாலிக் கபூர்

49. மதுரை எவ்வாறு அறியப்பட்டது?

கூடல்

50. பாண்டிய மன்னர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

கூடல்கோன், கூடல்நகர் காவலன்

51. பாண்டியர் காலத்து பிராமண குடியிருப்புகள் எவ்வாறு அறியப்பட்டது?

மங்கலம் அல்லது சதுர்வேதி மங்கலம்

52. யாருடைய ஆட்சியில் நிலம் வைத்திருப்பவர்கள் பூமிப் புத்திரர்கள் என அறியப்பட்டனர்?

பாண்டியர்கள் காலத்தில்

53. பாண்டியர்களின் வகுப்பு சபையின் பெயர் என்ன?

சித்திரமேலி பெரியநாட்டார்

54. பாண்டியர்களின் அமைச்சரவையில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள்?

மாணிக்கவாசகர், குலச்சிரையர், மாறன்காரி

55. பாண்டியர்களின் தலைமைச் செயலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

எழுத்து மண்டபம்

56. பாண்டியர்களின் கிராம நிர்வாகம் குறித்து குறிப்பிடும் கல்வெட்டு?

மானூர் கல்வெட்டு, திருநெல்வேலி

57. பாண்டியர்களால் மேற்கொள்ளப்பட்ட சடங்குகள்? குறிப்பிடும் பட்டயம்?

1. அஸ்வமேதயாகம்

2. ஹிரண்யகர்பா

3. வஜபேய யாகம்

வேள்விக்குடி பட்டயங்கள்

58. பாண்டியர்கள் காலத்தில் குதிரை வணிகம் மேற்கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

குதிரை செட்டிகள்

59. காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

தூத்துக்குடி

60. பாண்டியர்கள் காலத்து தங்கக் காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

காசு, கலஞ்சு, பொன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.