உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இந்திய மகளிருக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 2-1 என கைப்பற்றியது. 

Published On :7 பிப்ரவரி 2024, 8:52 pm IST

நவி மும்பை: இந்திய மகளிருக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 2-1 என கைப்பற்றியது. 
இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட்டில் மட்டும் தோல்வி கண்டு,  ஒருநாள் (3-0) மற்றும் டி20 தொடர்களை வென்றிருக்கிறது. 
முன்னதாக, இந்த 3-ஆவது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய இன்னிங்ஸின் தொடக்க வீராங்கனைகளில் ஷஃபாலி வர்மா 6 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு வெளியேற, ஒன் டவுனாக வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 
3-ஆவது விக்கெட்டாக, தொடக்க வீராங்கனைகளில் மற்றொருவரான ஸ்மிருதி மந்தனா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 29 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்தோரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 3 ரன்களுக்கு ஆட்டத்தை முடித்துக் கொள்ள, 6-ஆவது பேட்டராக வந்த தீப்தி சர்மா 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். 
அணியின் ஸ்கோரை அதிகரிக்க உதவிய ரிச்சா கோஷ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 34 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். ஓவர்கள் முடிவில் அமன்ஜோத் கெளர் 2 பவுண்டரிகளுடன் 17, பூஜா வஸ்த்ரகர் 1 சிக்ஸருடன் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
ஆஸ்திரேலிய பெளலிங்கில் அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2, மீகன் ஸ்கட், ஆஷ்லே கார்டனர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 
பின்னர் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் கேப்டன் அலிசா ஹீலி - பெத் மூனி முதல் விக்கெட்டுக்கே 85 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர்.
 இதில் ஹீலி 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த டாலியா மெக்ராத் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வெளியேற, எலிஸ் பெரி டக் அவுட்டானார். 
முடிவில் பெத் மூனி 5 பவுண்டரிகள் உள்பட 52, போப் லிட்ச்ஃபீல்டு 17 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
இந்திய பெளலிங்கில் பூஜா வஸ்த்ரகர் 2, தீப்தி சர்மா 1 விக்கெட் எடுத்தனர். 


இந்தியா


20 ஓவர்கள்

ரிச்சா கோஷ்    34
ஸ்மிருதி மந்தனா    29
ஷஃபாலி வர்மா    26

பந்துவீச்சு

அனபெல் சதர்லேண்ட்    2/12
ஜார்ஜியா வேர்ஹாம்    2/24
மீகன் ஸ்கட்    1/36


ஆஸ்திரேலியா

அலிசா ஹீலி    55
பெத் மூனி    52*
டாலியா மெக்ராத்    20

பந்துவீச்சு

பூஜா வஸ்த்ரகர்    2/26
தீப்தி சர்மா    1/32
டைட்டஸ் சாது    0/23

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.