உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

தமிழ் தலைவாஸுக்கு 3-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 46-27 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி. யோதாஸை புதன்கிழமை வென்றது.

Published On :7 பிப்ரவரி 2024, 8:51 pm IST


மும்பை: புரோ கபடி லீக் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 46-27 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி. யோதாஸை புதன்கிழமை வென்றது.

தலைவாஸுக்கு இது 11 ஆட்டங்களில் 3-ஆவது வெற்றியாக இருக்க, யோதாஸுக்கு இது 12 ஆட்டங்களில் 8-ஆவது தோல்வியாகும்.

இந்த ஆட்டத்தில் தலைவாஸ் 22 ரெய்டு புள்ளிகள், 18 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள் பெற்றது. யோதாஸ் அணி 18 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக தலைவாஸ் தரப்பில் ரெய்டா் நரேந்தா் 14 புள்ளிகள் கைப்பற்ற, யோதாஸ் அணியில் ஆல்-ரவுண்டா் விஜய் மாலிக் 10 புள்ளிகள் வென்றாா்.

இதனிடையே, யு மும்பா - ஹரியாணா ஸ்டீலா்ஸ் அணிகள் மோதிய 66-ஆவது ஆட்டம் 44 - 44 என்ற கணக்கில் ‘டை’யில் முடிந்தது. மும்பா அணி 24 ரெய்டு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. ஹரியாணா அணி 22 ரெய்டு புள்ளிகள், 18 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள் பெற்றது.

அதிகபட்சமாக, மும்பா அணியில் ஆல்-ரவுண்டா் அமீா் முகமது 14 புள்ளிகளும், ஹரியாணா அணியில் ரெய்டா்கள் சந்திரன் ரஞ்ஜித், வினய், சித்தாா் தேசாய் ஆகியோா் தலா 7 புள்ளிகள் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.