உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

4 நாடுகள் ஹாக்கி: 26 பேருடன் இந்திய அணி

தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 4 நாடுகள் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி 26 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. 

Published On :7 பிப்ரவரி 2024, 8:51 pm IST


புது தில்லி: தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 4 நாடுகள் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி 26 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. 
நடப்பாண்டில் ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் நிலையில், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக பெரும்பாலான வீரர்களை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கையாக இந்த அணியில் 26 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக, அணியின் தலைமை பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் கூறினார். 

சற்று இடைவெளிக்குப் பிறகு மன்பிரீத் சிங் மீண்டும் அணியில் இணைந்திருக்க, ஹர்மன்பிரீத் கேப்டனாகவும், ஹர்திக் சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜூனியர் வீரர்களான அராய்ஜீத் சிங் ஹண்டால், பாபி சிங் தாமி ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர். இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் ஜனவரி 22}ஆம் தேதி தொடங்குகிறது.

அணி விவரம்:

கோல்கீப்பர்கள்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷன் பகதூர் பதக், பவன். 
டிஃபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஜக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார், சுமித், சஞ்ஜய், ரவிச்சந்திர சிங். 
மிட்ஃபீல்டர்கள்: விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட சர்மா, ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், விஷ்ணுகாந்த் சிங், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங். 
ஃபார்வர்ட்கள்: மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், குர்ஜந்த் சிங், லலித் குமார் உபாத்யாய், ஆகாஷ்தீப் சிங், அராய்ஜீத் சிங் ஹண்டால், பாபி சிங் தாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.