உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

பிரணாய், லக்ஷயா அதிர்ச்சித் தோல்வி

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீரர்களான ஹெச்.எஸ்.பிரணாய், லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர். 

Published On :7 பிப்ரவரி 2024, 8:51 pm IST


கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெறும் சர்வதேச ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீரர்களான ஹெச்.எஸ்.பிரணாய், லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர். 
ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8}ஆம் இடத்திலிருந்த பிரணாய் 14}21, 11}21 என்ற கேம்களில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சனிடம் வெற்றியை இழந்தார். இந்த ஆட்டம் 43 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. லக்ஷயா சென் 15}21, 16}21 என்ற கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தை 49 நிமிஷங்களில் நிறைவு செய்தார் ஹாங் யாங். 
எனினும், ஆடவர் இரட்டையரில் போட்டித்தரவரிசையில் 2}ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி முதல் சுற்றில் 21}18, 21}19 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி/பகஸ் மெளலானா இணையை சாய்த்தனர். இந்த ஆட்டம் 44 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.